மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை. ஜெயலலிதா மனுதாக்கல்

மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை. ஜெயலலிதா மனுதாக்கல்

jayalalithaa_0_0_0_0_1_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், அவர் சொத்து மதிப்பை கணக்கிட்டதில் தவறு எதுவும் இல்லை என்றும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கோ அன்பழகனுக்கோ தார்மீக உரிமை இல்லை என்றும் எனவே அவர்களின் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பினாகி. சந்திரகோஸ் மற்றும் அமிர்தவராய் அடங்கிய பெஞ்ச் முன்பு ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு கடந்த 8 ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் எழுத்துப் பூர்வமாக மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதின் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்தது. அதில்,  சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு தவறானது என்பது உள்ளிட்ட வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய 16 அம்சங்களையும் அளிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் ஜெயலலிதா உள்ளிடோர் நேற்று தாக்கல் செய்துள்ள மனுவில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், அவர் சொத்து மதிப்பை கணக்கிட்டதில் தவறு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் அந்த மனுவில்,  சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய அன்பழகன் மற்றும் கர்நாடக அரசுக்கு எந்த வீதமான உரிமையும் இல்லை என்பதால், அவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply