இவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம். இன்னும் இருக்கின்றது. தேர்தல் அறிக்கை குறித்து ஜெயலலிதா

இவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம். இன்னும் இருக்கின்றது. தேர்தல் அறிக்கை குறித்து ஜெயலலிதா
jayalalitha
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஏராளமான சலுகைகளோடு மேலும் பல சலுகைகள் மக்களுக்கு கிடைக்கும் என்றும் கடந்த தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை அறிவித்ததை போல இந்த முறையும் தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றுவேன் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்றை தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசியபோது, “நான் வெளியிட்டு தேர்தல் அறிக்கையை பார்த்துவிட்டு இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள். 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, நான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 54 தலைப்புகளின் கீழ் நூற்றுக்கணக்கில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தேன். அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நான் சொன்னதை செய்தேன். சொல்லாதவற்றையும், பலவற்றை செய்தேன். உண்மை எப்படி நம்பிக்கையை கொடுக்கிறதோ, உழைப்பு எப்படி வசதியை கொடுக்கிறதோ, திறமை எப்படி வெற்றியை கொடுக்கிறதோ, அது போல எனது ஆட்சி வசந்தத்தை கொடுத்திருக்கிறது.

தன் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பது ஒரு தாய்க்கு தான் தெரியும். அதனால் தான் உங்களுக்கு என்ன தேவை என்பதை யோசித்து, யோசித்து, பார்த்து, பார்த்து இந்த தேர்தல் அறிக்கையை நான் தயாரித்திருக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Leave a Reply