சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டி. அதிகாரபூர்வ அறிவிப்பு

jayalalithaசென்னை ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இதை அதிமுக தலைமை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 23ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஆனால் எம்.எல்.ஏ.வாக இல்லாத ஜெயலலிதா ஆறு மாதத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. இதனால், ஜெயலலிதா போட்டியிடும் வசதியாக சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ வெற்றிவேல், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையமும் உடனடியாக அறிவித்தது. அதாவது, ஜூன் 27ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், ஜூன் 3ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்து விட்டது.

இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சென்னையில் டிராபிக் ராமசாமியை அனைவருக்கும் தெரியும் என்றாலும் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் அவரால் வெற்றி பெற முடியுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply