வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் ஜெயலலிதா

tigerசென்னை நகர மக்களின் முக்கிய சுற்றுலா பகுதியான வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள அகான்க் ஷா என்ற வெள்ளைப் புலி சமீபத்தில் நான்கு பெண் புலி குட்டிகளை ஈன்றெடுத்தது. அந்த புலிக்குட்டிகளுக்கு அனிதா, ப்ரீதா, சுனீதா மற்றும் சங்கீதா என தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: “வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 15.3.2013 அன்று நேரில் சென்று ஏழு புலிக் குட்டிகளுக்கு அர்ஜுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று பெயர் சூட்டினார்.  மேலும், பூங்காவில் உள்ள வன விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் உணவு மற்றும் பாதுகாப்பு குறித்தும், பார்வையாளர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும், 9.5.2014 அன்று அனு என்ற வெள்ளைப் புலி ஈன்றெடுத்த இரண்டு பெண் புலி குட்டிகளுக்கு தாரா மற்றும் மீரா என்றும், ஒரு ஆண் புலி குட்டிக்கு பீமா என்றும், நம்ருதா என்ற புலி ஈன்றெடுத்த இரண்டு ஆண் புலி குட்டிகளுக்கு ஆதித்யா மற்றும் கர்ணா என்றும் பெயர் சூட்டினார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்படி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு வன உயிரினங்களை ஆண்டிற்கு சராசரியாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும்  அகான்க் ஷா  என்ற வெள்ளை பெண் புலி 12.9.2014 அன்று நான்கு பெண் புலி குட்டிகளை ஈன்றது. முதலமைச்சர் ஜெயலலிதா, அகான்க் ஷா என்ற வெள்ளை பெண் புலி ஈன்றெடுத்த நான்கு பெண் புலி குட்டிகளுக்கு அனிதா ((ANITHA)), ப்ரீதா (PREETHA), சுனீதா (SUNEETHA) மற்றும் சங்கீதா r§Ñjh (SANGEETHA) என்று பெயர் சூட்டியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply