காவிரி நீர் பிரச்சனையயை விவாதிக்க தயார். கருணாநிதியின் சவாலை ஏற்கிறேன். ஜெயலலிதா

13

காவிரி நதி நீர் பிரச்னையில், கருணாநிதியின் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதுகுறித்து கருணாநிதியுடன் நேருக்கு விவாதிக்க தயார். என்னுடன் சட்டப்பேரவையில் கருணாநிதி மட்டும் நேருக்கு நேராக விவாதிக்க வேண்டும். இதற்கு கருணாநிதி தயாரா?” என்று இன்று ஜெயல்லிதா கருணாநிதியின் சவாலுக்கு பதில் சவால் விடுத்தார்.

அதிமுக கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் முதல்வர் ஜெயல்லிதா இன்று ஆரணியில் பிரமாண்டமான கூட்டம் ஒன்றில் பேசினார். அதில் ஜெயலலிதா கூறியதாவது: ஒவ்வொரு தேர்தலின் போதும் மின் உற்பத்தி நிலையங்கள் முடங்கி மின் தட்டுப்பாடு ஏற்படுவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏற்காடு இடைத்தேர்தலின் போதும், தற்போதைய பாராளுமன்ற தேர்தலின்போதும் திடீர் திடீரென மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்து விடுகிறது. இதில் சதி இருப்பதாக சந்தேகம் எழுகின்றது.

மேலும் காவிரி நீர் பிரச்சனை குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா? என்று கருணாநிதி சவால் விட்டார். அவருடைய சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். சட்டசபையில் யாருடைய துணையும் இல்லாமல் நான் கருணாநிதியுடன் விவாதிக்க தயார். அதுபோல் அவரும் என்னுடன் நேருக்கு நேர் தனியாக வந்து விவாதிக்க தயாரா? என்று பதில் சவால் விடுத்தார்.

Leave a Reply