மூன்று மாநில முதல்வர்களை ஜெயலலிதா சந்திக்க வேண்டும். தா.பாண்டியன் வலியுறுத்தல்\

மூன்று மாநில முதல்வர்களை ஜெயலலிதா சந்திக்க வேண்டும். தா.பாண்டியன் வலியுறுத்தல்\

tha.pandianகாவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு ஆகிய பிரச்சனைகளுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களின் முதல்வர்களை சந்தித்து பேச வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன் மேலும் கூறியதாவது:

குறுவை சாகுபடி நடைபெறவில்லை. சம்பா சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள உரிய தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணசாகர், கபினி அணைகள் நிரம்பிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனாலும் தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகஅரசு திறந்துவிடவில்லை.

உபரி தண்ணீர் தான் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசுடன் தமிழகஅரசு நட்புறவுடன் உள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு படி தமிழகத்திற்குரிய தண்ணீரை தமிழகஅரசு பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நல்ல நட்புறவு கொண்டுள்ளார். பாலாறு பிரச்சினையில் தமிழகத்திற்குரிய தண்ணீரை எந்த தடையும் இன்றி தொடர்ந்து கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முல்லைப்பெரியாறு பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று கேரளா முதல்-மந்திரி சொல்லிவிட்டார். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை. எந்த நிபந்தனையும் இன்றி முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளை ஆட்சியாளர்களின் பிரச்சினையாக கருதாமல் 7½ கோடி தமிழக மக்களின் பிரச்சினையாக கருத வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண 3 மாநில முதல்-மந்திரிகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது அமைச்சர்கள் குழுவினருடன் நேரில் சந்தித்து பேச வேண்டும்.

இவர்களுடன் அனைத்துக்கட்சி குழுவினரையும் அழைத்து செல்லலாம். சட்டரீதியாக முயற்சி மேற்கொள்வதை விட பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply