தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிலும் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என மதுரை ஆதினம் நேற்று கூறியுள்ளார்.
நேற்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே தனியார் பட்டு ஜவுளிக்கடைக்கு ஆசி வழங்க வந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெருவார். இதே போல வரும் 2016-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் முதல்வராக பதவி வகிப்பார்.
ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள போதிலும், இதிலும் ஜெயலலிதா வெற்றி பெறுவார்.
மேலும் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை அடுத்த ஒரு வார காலத்துக்குள் முடிவுக்கு வரும்.
இவ்வாறு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறினார்.