சிங்கள வீரர்கள் சிறைபிடித்த 33 மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை. மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

7சிங்கள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 33 தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள நரேந்திரமோடியின் மத்திய அரசை ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா,  ”மீன் பிடி தடைகாலம் முடிந்து தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 33 மீனவர்களை 7 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அவர்களை  விடுவிக்க இலங்கை அரசிடம் புதிய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய-இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு ,முழு ஒத்துழைப்பு கொடுத்தவந்த போதிலும் சிறைபிடிப்பு தொடர்வது தமிழக அரசுக்கும் மீனவர்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை கடற்படையின் இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளை இந்தியா கட்டுப்படுத்தவேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கையை மோடி தலைமையிலான அரசு எடுக்க முன்வரவேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

தன்னுடைய கடிதத்தை முன்னாள் பிரதமர் அலட்சியப்படுத்தியது போல் மோடி அலட்சியப்படுத்தாமல் நடவடிக்கை எடுப்பார் என தாம் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்லார்.

Leave a Reply