வெள்ள நிவாரணமாக ரூ.2000 கோடி தேவை. பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வெள்ள நிவாரணமாக ரூ.2000 கோடி தேவை. பிரதமருக்கு முதல்வர் கடிதம்

jayalalitha wrote letter to manmohanதமிழகத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேல் கனமழை கொட்டியதால் தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளது. வெள்ளநீர் ஓரளவுக்கு வடிந்து வரும் நிலையில் மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் 169 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு உணவு, தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.

மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழுவை உடனே அனுப்ப வேண்டும்”

இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply