மத்திய அமைச்சர் உமாபாரதி கருத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்.

4a copyதமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை சந்தித்தபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நேரில் விளக்கம் அளித்து விரைவில் அந்த ஆணையத்தை அமைக்க வலியுறுத்தினார். பிரதமரும் இதுகுறித்து சரியான நடவடிக்கை எடுப்பதாக உறுடியளித்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்த கருத்து குழப்பத்தை எற்படுத்தும் வகையில் இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 19 வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் போராடி காவிரி நதிநீர் தீர்ப்பாயம் குறித்து நல்லதொரு தீர்ப்பை தமிழகம் பெற்றது. ஆனாலும் கடந்த காங்கிரஸ் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அக்கறை காட்டவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்படுத்தாவிட்டால் தீர்ப்பாயம் வழங்கிய இறுதி உத்தரவு அரசிதழில் காகிதமாக மட்டுமே இருக்கும் என்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி வரும் நிலையில் உமாபாரதி  நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்த கருத்து, தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த காங்கிரஸ் அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக  கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை அமைக்க பிரதமர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply