அம்மாதான் பிரதமர். அத்வானியே சொல்லிவிட்டார். ராமராஜன்

15

திரைப்படங்களில் நடிப்பது போலவே கலர் கலரான காஸ்டியூம்களில் தேர்தல் பிரச்சாரத்தில் பட்டையை கிளப்புகிறார் ராமராஜன். அவருடைய வெகுளித்தனமான பேச்சு பொதுமக்களை பெரிதும் கவர்ந்திழுக்கின்றது.

சமீபத்தில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அன்வர் ராஜாவுக்கு வாக்கு கேட்டுப் பிரசாரம் செய்ய வந்தார். அப்போது அவர் பேசியவைகளில் இருந்து ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்.

பி.ஜே.பி-யைச் சேர்நத அத்வானி, ‘வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராது. பி.ஜே.பி-யும் ஆட்சிக்கு வராமல் போனால் ஒரு மாநில தலைவர்தான் ஆட்சிக்கு வருவார்’ என்று சொல்லி இருக்கார். அந்த மாநிலம் தமிழகம்தான் எனச் சொல்லாமல் சொல்லிவிட்டார். பத்திரிகையாளர் சோ சொல்றார்… ‘மோடிக்குப் பிரதமர் பதவி கிடைக்கலைனா அந்தப் பதவி அம்மாவுக்குத்தான் கிடைக்கும்’னு.

கர்நாடகத்தைச் சேர்ந்த தேவகவுடா 23 எம்.பி-யை வெச்சு பிரதமர் ஆகும்போது 40 எம்.பி-யை வெச்சு அம்மா பிரதமராக முடியாதா என்ன? அம்மா பிரதமர் ஆவதை நீங்கள்  எல்லாரும் டி.வி-யில பாக்கத்தான் போறீங்க.

99-ல் நான் நாடாளுமன்ற உறுப்பினரா இருந்தேன். அப்ப நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் பேசிக்கிட்டு இருந்தார். இந்தி தெரியாத நானும் அவர் பேச்சைக் கேட்டுகிட்டு மண்டையை ஆட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப என் பின்னால் குறட்டைச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். தேவகவுடா தூங்கிட்டு இருந்தார். இப்படி தூங்குபவர்கள் எல்லாம் பிரதமர் ஆகும்போது ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கண்விழித்து தமிழக மக்களுக்காக உழைக்கும் அம்மா பிரதமர் ஆவதில் என்ன தவறு?

”அம்மா கையால லேப்டாப் வாங்குனவுங்க இந்தத் தேர்தல்ல முதல் முறையா கன்னி ஓட்டு போடப்போறாங்க. அவங்க மொத்த ஓட்டும் அம்மாவுக்குத்தான். அம்மா படிக்கும் பிள்ளைகளுக்கு மார்க் போடுறாங்க. ஆனா குஷ்புவும் நமீதாவும் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில உக்காந்து மார்க் போடுறாங்க.

Leave a Reply