பல்கலைக்கழக மாணவர்களுடன் பயங்கர மோதல். கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது புகார்.

9முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், தற்போதைய இலங்கை அமைச்சருமான, சனத் ஜெயசூரியா பல்கலைக் கழக மாணவர்களை கடுமையாக தாக்கியதாக திடுக்கிடும் புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ருகுண பல்கலைக்கழக மாணவர்களை அடையாளம் தெரியாத பெரும் கும்பல் ஒன்றைத் திரட்டி சென்ற சனத் ஜெயசூரியா, அவர்களை கடுமையாக தாக்கி காயப்படுத்தியதாக ஜனதா விமுக்தி பெரமுணா என்ற கட்சி குற்றம் சாட்டியுள்ளது.. ஆனால் இந்த குற்றச்சாட்டை சனத்ஜெயசூரியா உறுதியாக மறுத்துள்ளார்.

மாத்தரையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் கண்காட்சி வைக்க முடிவு செய்த பல்கலைகழக மாணவர்களின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.

ஆனால் ஜெயசூரியா அங்குள்ள கிராம மக்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் தான் அமைதியாக கலந்து கொண்டதாகவும், யாரையும் தாக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு தான் திரும்பிவிட்டதாகவும், வன்முறை நடந்தபோது தான் அந்த பகுதியில் இல்லை என்றும் ஜெயசூர்யா கூறியுள்ளார்.

Leave a Reply