பிரதமர் அலுவலகத்திற்கு தினமும் முடியை அனுப்பி வைப்போம். ஆர்யா அதிரடி அறிவிப்பு

பிரதமர் அலுவலகத்திற்கு தினமும் முடியை அனுப்பி வைப்போம். ஆர்யா அதிரடி அறிவிப்பு
nail
பாரத பிரதமர் நரேந்திர மோடி  கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி பீகார் மாநிலம் முசாபர்புர் நகரில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மரபணுவில் ஏதோ கோளாறு இருப்பதாவும், ஜனநாயக மரபணு அப்படி இல்லை என்றும் இந்த ஜனநாயகத்தில் அரசியல் எதிரியாக இருந்தாலும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் பேசினார். இதற்கு நிதீஷ்குமார் தரப்பில் இருந்து பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தினமும் ஒரு லட்சம் முடி, நகத்தின் மாதிரிகள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஐக்கிய ஜனதா தளம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தற்போது இதை நடைமுறைப்படுத்தும் வகையில் நேற்று முதல் தினமும் 1 லட்சம் முடி மற்றும் நகத்தின் மாதிரிகளை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும், இதற்காக ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் முடி, நக மாதிரிகளை சேகரித்து வருவதாகவும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் என்.கே.ஆர்யா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

இதுவரை 10 லட்சம் மாதிரிகளை ஏற்கெனவே சேகரித்து விட்டதாகவும், வரும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் 50 லட்சம் மரபணு மாதிரிகளை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் ஆர்யா மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply