நான்கு கட்டங்களாக நடக்கும் ஜே.இ.இ. முதன்மை தேர்வு, இரு கட்டங்களாக குறைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களுக்கு பின் ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதி, உள்ளடக்கம் என எதுவும் மாறாதபோது, எப்படி ஒவ்வொரு கொள்கையிலும் கோர்ட்டு தலையிட்டுக்கொண்டே இருக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த ரிட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக உரிய அமைப்பிடம் மனு அளிக்கலாம் என தெரிவித்து, மனுவை நீபதிகள் தள்ளுபடி செய்தனர்.