ஜெஇஇ மெயின் தேர்வு தேதி அறிவிப்பு: டிசம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்

images

மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் ஜெஇஇ மெயின் தேர்வு தேதிகள் வெளியிட்டுள்ளது.

ஜெஇஇ தேர்வு 2016 ஏப்ரல் 3, ஏப்ரல் 9, ஏப்ரல் 10 ஆகிய தேதிகள் நடத்தப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

டிசம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

டிசம்பர் 31 விண்ணப்பிக்கக் கடைசி.

ஏப்ரல் 3-ம் தேதி ஆப்லைன் தேர்வு

ஏப்ரல் 9 மற்றும் ஏப்ரல் 10 ஆன்லைன் தேர்வு

ஜெஇஇ தேர்வில் கேட்கப்படும் முறை:

பேப்பர் 1 (பி.இ/பி.டெக்) மற்றும் பேப்பர் 2 (பி.ஆர்க்/பி.பிளானிங்), மாணவர்கள் தேர்ந்தெடுத்து எழுதி, அதில் பெரும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு http://jeemain.nic.in/webinfo/welcome.aspx என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply