பிரபல நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறை. ஐதரபாத் நீதிமன்றம் தீர்ப்பு.

jeevitha
செக் சடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல நடிகை ஜீவிதாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதம் விதித்தும் ஐதராபாத் நீதிமன்றம் நேற்று அதிரடியாக தீர்ப்பளித்தது.

தெலுங்கு திரைப்பட சாமா சந்திரசேகர் ரெட்டி என்பவர் தயாரித்த “எவடைதே நாகேன்டி’என்ற தெலுங்கு திரைப்படம் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியானது. “இந்த படத்தின் விநியோக உரிமையை வாங்கிய நடிகை ஜீவிதா அவருக்கு ரூ.23.75 லட்சம் மதிப்புள்ள ஏழு காசோலைகளை கொடுத்துள்ளார். ஆனால் அவற்றில் ஆறு காசோலைகள் வங்கியில் பணமின்றி திரும்பியது.

இதனால் ஜீவிதா மீது சந்திரசேகர் ரெட்டி செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த ஐதராபாத் நீதிமன்றம், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை ஜீவிதாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் கட்டவேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய நடிகை ஜீவிதா “மேல்முறையீடு மூலம் நான், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு பணம் எதுவும் தர வேண்டியதில்லை என்பதையும் நிரூபிப்பேன்’ என்றார்.

நடிகை ஜீவிதா டி.ராஜேந்தர் இயக்கிய ‘உறவை காத்த கிளி’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ராஜமரியாதை, நானே ராஜா நானே மந்திரி, பதில் சொல்வாள் பத்ரகாளி, தர்மபத்தினி போன்ற  பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply