நடுவானில் விமானி தூக்கம். பாதை மாறி மாயமானதால் பெரும் பரபரப்பு

நடுவானில் விமானி தூக்கம். பாதை மாறி மாயமானதால் பெரும் பரபரப்பு

நடுவானில் விமான பைலட் ஒருவரின் தூக்கத்தால் விமானம் தவறான பாதையில் சென்று மாயமாகிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று சற்றுமுன் நடந்துள்ளது.

மும்பையில் இருந்து லண்டன் நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று 330 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம், ஜெர்மன் நாட்டு வான்வழியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதனால் இந்த விமானத்தை யாராது கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக ஜெர்மன் நாட்டு விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக ஜெர்மன் போர் விமானங்கள் அனுப்பப்பட்டு, மும்பையில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

இந்நிலையில் இந்த விமானத்துக்கு சற்றே முன்னால் பறந்து கொண்டிருந்த மற்றொரு ஜெட் ஏர்வேஸ் விமானமான 9W 122-த்தை தொடர்பு கொண்ட ஜெர்மன் நாட்டு விமான கட்டுப்பாட்டு அறை, இந்த தகவலை கூறியுள்ளது. இத்தகவலை கேட்ட அவர்கள், இந்தியாவில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர், செயற்கைக்கோள் தொலைபேசி என்பன போன்ற விமானம் தகவல் தொடர்பை பயன்படுத்தி மாயமான ஜெட் ஏர்வேஸ் 9W 118 விமானத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, ஜெர்மன் நாட்டு விமான கட்டுப்பாட்டு அறையுடன் மாயமான விமானத்தினர் பேசியுள்ளனர். அந்த விமானமும் பத்திரமாக லண்டனுக்கு போய் சேர்ந்து விட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாயமான விமானத்தின் விமானிகளில் ஒருவர் தூங்கி விட்டதாகவும் (சட்ட திட்டங்களுக்குட்பட்டு), மற்றொருவர் அலைவரிசையை மாற்றி வைத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அலைவரிசையை மாற்றி வைத்ததுடன் தனது ஹெட்செட் சத்தத்தையும் அவர் குறைத்து வைத்துள்ளதாக தெரிகிறது. இதனாலேயே அந்த விமானத்தை அதிகாரிகளால் தொடர்பு கொள்ள இயலாமல் பொய் விட்டது என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply