கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் வாங்கியவர்களுக்கு கடன் தள்ளுபடி அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்பதும் அதிரடி அறிவிப்புகள் பல வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் வாங்கியவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து இது குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூட்டுறவு துறை அமைச்சர் மற்றும் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசித்து வருவதாகவும் தீபாவளிக்கு முன்பே நகை கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வர வாய்ப்பிருப்பதாகவும் இதுகுறித்து அரசாணையும் தயாராகி வருவதாகவும் கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது