7% வட்டியில் இனி கடன் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி

7% வட்டியில் இனி கடன் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி

7% வட்டியில் இனிமேல் விவசாய நகை கடன் வழங்கக் கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் செய்துள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

மேலும் 11% நகை கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீதம் மானியம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கான விவசாய நகை கடன் வட்டி 7% இலிருந்து 9.25 சதவீதம் முதல் 11 வரை உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளாக இல்லாதவர்களும் விவசாய நகை கடன் பெற்று வருவதாக வெளிவந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன

Leave a Reply