அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு யூதர்கள் திடீர் எதிர்ப்பு.

அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு யூதர்கள் திடீர் எதிர்ப்பு. கிளிண்டன் வெற்றி வாய்ப்பு பிரகாசம்

donaldஅமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக அமெரிக்காவில் வாழும் யூத மக்கள் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வரும் திங்கட்கிழமை வாஷிங்டன் நகரில் யூத மக்களிடம் ஆதரவு கேட்டு அவர் சிறப்பு கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில் யூதர்களின் இந்த முடிவு அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் நடத்த இருக்கும் இந்த சிறப்பு கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பெரும்பாலான யூத மதத் தலைவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்கவாழ் யூதர்களின் மூத்த தலைவர் ரபிஸ் டேவிட் பஸ்கின் என்பவர் பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘டொனால்டு டிரம்ப் மக்களிடம் வெறுப்பை விதைத்து வருகிறார். மதவாதத்தை தூண்டி வருகிறார். எனவே அவரை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று கூறினார். இவர் மட்டுமின்றி பெரும்பாலான யூத மதத் தலைவர்கள் இதே கருத்தை தெரிவித்துள்ளதால் யூதர்களின் வாக்குகள் அனைத்தும் ஹிலாரி கிளிண்டனுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply