குற்றவாளி ஜெய்சங்கர் மீண்டும் சிறையில் அடைப்பு

தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் ஏராளமான பெண்களை கற்பழித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த காமக்கொடூரன் ஜெய்சங்கர், கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி சிறையில் உள்ள காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினான்.

அதன்பிறகு, 6 நாட்கள் கழித்து சிறையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு ஷெட்டில் பதுங்கி இருந்த அவன் கைது செய்யப்பட்டான்.

காம்பவுண்டு சுவர் ஏறி குதித்ததில் ஜெய்சங்கரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. மேலும் அவனது முதுகு தண்டவாளத்திலும் முறிவு ஏற்பட்டு இருந்தது. இதற்காக விக்டோரியா ஆஸ்பத்திரியில் ஜெய்சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஜெய்சங்கர் பூரண குணமடைந்தான். அதைத்தொடர்ந்து, ஜெய்சங்கரை நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச் சென்று மீண்டும் சிறையில் அடைத்தார்கள்.

Leave a Reply