தினந்தோறும் 3ஜிபி டேட்டா: ஜியோ தரும் அதிரடி சலுகை12ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அவ்வப்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகலை அறிவித்து வரும் நிலையில் தற்போது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி தற்போது நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி தினந்தோறும் 3 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும், இந்த சலுகை இன்று ஜூன் 12 முதல் 30-ம்தேதி வரை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
இதன்படி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.149, ரூ.349, ரூ.399, ரூ.449 ஆகிய தொகைக்கு ரீசார்ஜ் செய்தால், வழக்கமாக வழங்கப்படும் நாள்தோறும் 1.5ஜிபி (4ஜி)டேட்டாவோடு கூடுதலாக 1.5ஜிபி டேட்டா வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக நாள்ஒன்றுக்கு 4ஜி வேகத்தில் 3ஜிபி டேட்டா வழங்கப்படும்.
அதேபோல் ரூ.198, ரூ,398, ரூ.448 மற்றும் ரூ.498க்கு ரீசார்ஜ் செய்து, நாள்தோறும் இலவசமாக 2ஜிபி(4ஜி) டேட்டா பெறும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இனி நாள்தோறும் 4ஜிவேகத்தில் 3.5ஜிபி டேட்டா இலவசமாக பெறுவார்கள். ரூ.299க்கு ரீசார்ஜ் செய்தால்,வழக்கமாக 3ஜிபி டேட்டா மட்டுமே நாள்தோறும் கிடைக்கும். இனி நாள்தோறும் 4.5ஜிபி டேட்டாவை 4ஜிவேகத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல, ரூ.509க்கு ரீசார்ஜ் செய்தால், நாள்தோறும் 4ஜிபி டேட்டா வழங்கப்படுவதற்குப் பதிலாக கூடுதலாக 1.5ஜிபி சேர்த்து 5.5 ஜிபிடேட்டா 4ஜி வேகத்தில் வழங்கப்படும்.
ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் 6.5 ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும். இதுதவிர இலவச வாய்ஸ்கால், எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ் பயன்பாடும் அளிக்கப்படுகிறது.
இதுதவிர ரூ.300 மற்றும் அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 தள்ளுபடியும், ரூ.300க்கு குறைவாக ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் தரப்படுகிறது. ஆனால், இந்த ரீசார்ஜ் ஜியோ ஆப்ஸ், அல்லது போன்பே ஆப்ஸ் மூலம் செய்யப்பட வேண்டும்.
ஜியோ ஆப்ஸில் ரூ.149க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.120 செலுத்தினாலே போதுமானது. இந்த வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் 3 ஜிபி இலவச டேட்டா உள்ளிட்ட 28 நாட்களுக்கு 84 ஜிபி 4ஜிவேகத்தில் இலவசமாக வழங்கப்படும்.
ரூ.399க்கு ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்களுக்கு 252 ஜிபி வழங்கப்படும்.
இவ்வாறு ஜியோ நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.