“மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம்” : வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு..!

“மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம்” : வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு..!

நேற்று முன் தினம் தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் விடுதியில் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்திருக்கலாம் என டெல்லி பல்கலை நிர்வாகம் தெரிவித்திருந்தாலும், இதில் முத்துகிருஷ்ணன் பெற்றோருக்கு உடன்பாடில்லை.

நேற்று டெல்லி சென்ற முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே இது குறித்து தாழ்த்தப்பட்டோர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இதுகுறித்து அறிவுரை வழங்கிய வசந்த விகார் காவல் நிலைய அதிகாரிகள் யார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்? என குறிப்பிட்டால் மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும் என்று முத்துகிருஷ்ணன் தந்தையிடம் கூறினர்.

இந்நிலையில் இன்று காலை வசந்த விகார் காவல் நிலையத்திற்கு வந்த முத்துக்கிருஷ்ணனின் தந்தை மற்றும் டெல்லி பல்கலைகழக மாணவர்கள், முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக நிர்வாகம் மற்றும் வேந்தர் மீது சந்தேகம் இருப்பதாகவும் , எனவே அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு இந்த வழக்கு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply