சண்டையை விலக்க சென்ற பெண் எம்.பி சுட்டுக்கொலை. பிரிட்டனில் பரபரப்பு

சண்டையை விலக்க சென்ற பெண் எம்.பி சுட்டுக்கொலை. பிரிட்டனில் பரபரப்பு

mpசமீபத்தில் அமெரிக்காவில் கண்மூடித்தனமாக ஐ.எஸ்.தீவிரவாதி ஒருவன் சுட்டதில் சுமார் 50 பேர் பரிதாபமாக பலியான சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் மறையாத நிலையில் நேற்று லண்டனில் பரபரப்பு மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஒரு பெண் எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து தீர்மானிக்க பொது வாக்கெடுப்பு, ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக, பிரிட்டன் முழுவதும் ஆளும் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியினரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்பது தொழிலாளர் கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது. இதற்காக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியான ஜோ காக்ஸ், தனது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். நேற்று காலை அவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த இரு நபர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதாகவும், இந்த சண்டையை ஜோ காக்ஸ் விலக்க முயன்றபோது, மோதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் திடீரென தனது கைத் துப்பாக்கியால் ஜோ காக்ஸை சரமாரியாக சுட்டுவிட்டு பின்னர், தன்னுடன் மோதலில் ஈடுபட்ட நபரையும் சுட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரிட்டன் போலீசார் உடனடியாக  விரைந்து வந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜோ காக்ஸ் உள்ளிட்ட இருவரையும்  அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.  பெண் எம்பிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார். அதிகளவு ரத்தம் வெளியேறியதால்தான் அவர் மரனம் அடைந்ததாக மருத்துவர்ககள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், கொலை செய்த மர்ம மனிதரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Jo Cox MP dead after shooting attack

Leave a Reply