இந்திய அரசின் கீழ் பஞ்சாப்பில் செயல்பட்டு வரும் தேசிய உரத்தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியியல் உதவியாளர் கிரேடு II பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2015/BTI
மொத்த காலியிடங்கள்: 35
பதவி: Junior Engineering Assistant Grade-II
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemical – 17
தகுதி: 50 சதவீகித மதிப்பெண்களுடன்இயற்பியல், வேதியியல், கணிதப் பாடத்தில் பி.எஸ்.சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கெமிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
2. Mechanical – 04
தகுதி: 50 சதவீகித மதிப்பெண்களுடன்மெக்கானிக்ல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
3. Electrical – 09
தகுதி: 50 சதவீகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
4. Instrumentation – 05
தகுதி: Instrumentation/Electronics Engineering பிரிவில் 50 சதவீகித மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,000 – 16,000 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 31.05.2015 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: பதின்டா (Bathinda)
விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதன் கணினி பதிவு எண் மற்றும் ரகசிய எண்ணை குறித்து வைத்துக்கொள்ளவும். மேலும் கணினி பிரதி ஒன்றையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வரவேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.nationalfertilizers.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.