இந்தியன் ஆயில் கழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி

indianoil

அரியானா மாநிலம், பரிதாபாத்தில் உள்ள இந்தியன் எண்ணெய் நிறுவன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி: Research Officer (Chemistry)

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500.

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Research Officer (Bio technology)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500.

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்டிரி, பயோ சயின்சஸ், பயோ கெமிக்கல், பயோ புராசசஸ் போன்ற ஏதாவதொரு பொறியியல் துறையில்  முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Research Officer (Automotive Research)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையான மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தெர்மல் இன்ஜினியரிங், ஐசி இன்ஜின்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Research Officer (Chemical Engineering)

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கெமிக்கல் துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Senior Officer

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500.

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், தெர்மல் இன்ஜினியரிங், ஐசி இன்ஜின்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Deputy Manager (Research)/ Senior Research officer

காலியிடங்கள்: 01

தகுதி: மெக்கானிக்கல் துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மெக்கானிக்கல் பொறியியல் துறையில் எம்.இ முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Chief Research Manager/ Senior Research Manager

காலியிடங்கள்: 01

சம்பளம்:

சீப் ரிசர்ச் மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.51,300 – 73,000.

சீனியர் ரிசர்ச் மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.43,200 – 66,000.

தகுதி: பரிசோதனை இயற்பியலில் அல்லது உடலியக்க வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Chief Research Manager/ Senior Research Manager

காலியிடங்கள்: 01

சம்பளம்: சீப் ரிசர்ச் மேனேஜர் பணிக்கு மாதம்ரூ.51,300 – 73,000.

சீனியர் ரிசர்ச் மேனேஜர் பணிக்கு மாதம் ரூ.43,200 – 66,000.

தகுதி: ஆர்கானிக் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது வரம்பு, கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவை 30.09.2014 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் பி.இ., மற்றும் எம்.இ. படிப்புகளில் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவ தகுதி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ‘Indian Oil Corporation Limited, R – D Centre, Faridabad’ என்ற பெயருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் (பரிதாபாத் கோட் எண்: 10449) டி.டி.யாக செலுத்தவும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Indian Oil Corporation Ltd.,

R -D Centre, Post Box.No: 720,

Escorts Nagar Post Office,

Faridabad 121007.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2014.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply