இந்திய ராணுவ அகாடமி (Indian Military Academy), இந்திய கப்பற்படை அகாடமி Indian Naval Academy, விமானப்படை அகாடமி Air Force Academy மற்றும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி ஆகியவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் அதிகாரி அந்தஸ்திலான பணிகளில் சேர்வதற்கான Combined Defence Service Examination என்ற தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆண்டுக்கு இரு முறை நடத்தி வருகிறது.
Combined Defence Services Examination (II) 2015 தேர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வு 01.11.2015 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத்த விரும்புகிறவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றந.
பயிற்சி மற்றும் காலியிடங்கள் விவரம்:
இந்திய மிலிட்டரி அகாடமி – Indian Military Academy
காலியிடங்கள்: 200
வயதுவரம்பு: 02.07.1992க்கு முன்பும் 01.07.1997க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய கப்பற்படை அகாடமி – Indian Naval Academy
காலியிடங்கள்: 45
வயதுவரம்பு: 02.07.1992க்கு முன்பும் 01.07.1997க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.
தகுதி: பி.இ முடித்திருக்க வேண்டும்.
விமானப்படை அகாடமி – Air Force Academy
காலியிடங்கள்: 32
வயதுவரம்பு: 02.07.1992க்கு முன்பும் 01.07.1996க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் கொண்ட அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் அல்லது பி.இ முடித்திருக்க வேண்டும்.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஆபிசர்ஸ் பயிற்சி அகாடமி ஆண்கள் – Officers Traing Academy
காலியிடங்கள்: 175
வயதுவரம்பு: 02.07.1991க்கு முன்பும் 01.07.1997க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.
ஆபிசர்ஸ் பயிற்சி அகாடமி பெண்கள் – Officers Training Academy
காலியிடங்கள்: 12
வயதுவரம்பு: 02.07.1992க்கு முன்பும் 01.07.1997க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பெண் விண்ணப்பதாரர்கள் ஆபீசர்ஸ் டிரபெய்னிங் அகாடமிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் அவர்கள் அந்த பிரிவை மட்டுமே (OTA) தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆண் விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ்சி-க்கு மட்டும் (ராணுவ பிரிவு) விண்ணப்பிப்பவர்கள் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியை மட்டுமே (OTA) தேர்ந்தெடுக்க வேண்டும்.
விமானப்படை பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் AFA-வை தெரிவாக குறிப்பிட வேண்டும்.
வயதுவரம்பு: 02.07.1992க்கு முன்பும் 01.07.1997க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.
தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், கொச்சி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
எழுத்துத் தேர்வு: ராணுவ அகாடமி, கப்பற்படை அகாடமி, விமான படை அகாடமி பிரிவுகளுக்கு ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படை கணிதம் ஆகிய பிரிவுகளில் தலா 2 மணி நேரம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.