அரியானா அருகே கர்னலில் உள்ள தேசிய பால் வள ஆராய்ச்சி நிலையம் மற்றும் பெங்களூர், கல்யாணி ஆகிய இடங்களில் காலியாக உள்ள 56 டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: Technician (Workshop) – 08
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant: (Field Farm) – 06
தகுதி: Veterinary Science/ Veterinary Science & Animal Husbandry பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Field Farm) – 08
தகுதி: வேளாண்மை, விலங்குகள் பாதுகாப்பு மற்றும் பால்வளம் ஆகிய பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Field Farm) – 05
தகுதி: பண்ணை அறிவியல், பண்ணை தொழில்நுட்பம், உணவு அறிவியல், உணவு தொழில்நுட்பம், உணவு அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Lab Technician) – 08
தகுதி: வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Laboratory Technician) – 05
தகுதி: Genetics, Microbiology, Biochemistry, Bio Technology போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant: (Laboratory Technician) – 02
தகுதி: பொறியியில் துறையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.டெக், பி.எஸ்சி அல்லது பிசிஏ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Workshop) – 03
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Workshop) – 04
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பி.இ அல்லது 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technical Assistant – 03
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ அல்லது 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technical Assistant: – 04
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் பி.இ அல்லது 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 – 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., ஒபிசியினருக்கு அரசு விதிப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதனை ICAR-UNIT-NDRI என்ற பெயரில் கர்னலில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Joint Director (Admn.,) & Registrar,
National Dairy Research Institute,
KARNAL- 132001,
HARYANA.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.02.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ndri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.