கனரக வாகன ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

2

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 580 ஓட்டுநர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கான பதிவு மூப்பு பட்டியலை சரிபார்க்க கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்  அழைப்பு விடுத்துள்ளார்.

 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  ஓட்டுநர் பணிக்கான கல்வித்தகுதியாக 8-ஆம் வகுப்பு

தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்,கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1.7.2015 அன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு

35 வயதும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமியர் ஆகிய பிரிவினருக்கு 32 வயதும், இதர வகுப்பினருக்கு 30 வயதும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 இப்பணியிடத்திற்கு மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு விவரம் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தங்களது பதிவு மூப்பு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், பதிவு மூப்பு தேதிக்குள் தங்களது பெயர் விடுபட்டிருந்தால் வரும் 30 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply