இந்திய கப்பல் கழகத்தில் Graduate Marine Engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Graduate Marine Engineer
தகுதி: Mechanical Engineering துறையில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 24க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: அதிய இந்திய அளவில் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வு நடைபெறும் இடம்: மும்பை, புதுதில்லி, கொல்கத்தா, சென்னை
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 02.08.2015
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை எஸ்பிஐ வங்கியில் நெஃப்ட் முறையின் கீழ் பணமாக செலுத்தி அதற்குரிய UTR எண் பெற்றுக்கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.shipindia.com/career/fleet personnel என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2015
ஆன்லைனில் விண்ணப்ப நகல் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Vice President, Fleet Personnel Department, Third Floor, The Shipping Corporation of India Limited, Shipping House, 245 Madame Cama Road, Nariman Point, Mumbai – 400021
Maharashtra.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.shipindia.com/career/fleet personnel என்ற இணையதளத்தை பார்க்கவும்.