பொறியியல் பட்டதாரிகளுக்கு யுரேனியம் கழகத்தில் அதிகாரி பணி
ஜார்க்கண்டில் செயல்பட்டு வரும் யுரேனியம் கழகத்தில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் டிரெய்னீஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy General Manager (Mill) – 01
சம்பளம்: மாதம் ரூ.36,600 – 62,000.
வயது வரம்பு: 28.03.2016 தேதியின்படி 48க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் அல்லது மெட்டாலர்ஜிக்கல் பிரிவில் பி.இ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Chief Superintendent (Electrical)/ Superintendent (Electrical) – 01
வயது வரம்பு: 28.03.2016 தேதியின்படி 45 – 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி குறித்த அறிவுடன் பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 15 – 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்..
பணி: Additional Controller of Stores – 03
வயது வரம்பு: 28.03.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பி.இ முடித்து மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ அல்லது முதுநிலை டிப்ளமோ அல்லது மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பாடத்தை சிறப்பு பாடமாகக் கொண்டு எம்பிஏ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 9 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Superintendent (Mill) – 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500.
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெட்டாலர் ஜிக்கல் பிரிவில் பி.இ முடித்து 6 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Controller of Stores & Purchase – 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500.
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பி.இ முடித்து மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் டிப்ளமோ அல்லது முதுநிலை டிப்ளமோ முடித்து 6 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Manager (Accounts) – 01
சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500.
தகுதி: சிஏ, ஐசிடபிள்யூஏ முடித்து 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (Medical Services) – 03
சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500.
தகுதி: எம்பிபிஎஸ் பட்டம் பெற்று 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (Accounts) – 01
சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500.
தகுதி: சிஏ, ஐசிடபிள்யூஏ மற்றும் 2 வருட பணி அனுபவம்.
பணி: Assistant Controller of Stores & Purchase – 01
சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500.
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பி.இ முடித்து மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் டிப்ளமோ அல்லது முதுநிலை பட்டத்துடன் 6 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Superintendent (Industrial Engineering) – 01
சம்பளம்: ரூ.16,400 – 40,500.
தகுதி: Industrial Engineering பிரிவில் பி.இ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: மேற்குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Security Officer – 01
சம்பளம்: ரூ.12,600 – 32,500.
வயது: 28.3.2016 தேதிப் படி 50க்குள்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று முப்படையின் ஏதாவதொன்றில் 18 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Diploma Trainee (Chemical) – 01
சம்பளம்: மாதம் ரூ.23,078.
வயது வரம்பு: 28.03.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Fire Officer – 01
சம்பளம்: மாதம் ரூ.25,000.
வயது வரம்பு: 28.03.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fire Fighting, Fire Safety பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உடற் தகுதி: உயரம்: 165 செ.மீ., எடை: 50 கிலோ. மார்பளவு: 81 செ.மீ., விரிவடைந்த நிலையில்: 86 செ.மீ., தெளிவான கண்பார்வை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து சான்றிதழ்களின் அசல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50. இதனை ‘URANIUM CORPORATION OF INDIA LIMITED’ என்ற பெயரில் Jaduguda (Code:0227) Jharkandல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (Pers.,/IRS.,),
Uranium Corporation of India Limited,
P.O.Jaduguda Mines, Singhbhum District,
Jharkhand East- 832102.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.03.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ucil.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.