தமிழக அரசு துறையில் காலியாக உள்ள 4963 Junior Assistant, Bill Collector, Typist, Steno-Typist Grade-III, Field Surveyor, Draftsman போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)
மொத்த காலியிடங்கள்: 4963
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: இளநிலை உதவியாளர் (பிணையம்) – 39
பணி: இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) – 2133 3. தட்டச்சர் – 1683
பணி: வரித் தண்டலர் – 22
சம்பளம்: மாதம் ரூ.5200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: சுருக்கெழுத்து தட்டச்சர்- 331
சம்பளம்: மாதம் ரூ.5200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: வரை வாளர் – 53
பணி: நில அளவர்- 702
சம்பளம்: மாதம் ரூ.5200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தேர்வாணைய இணையதளமான www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்கு உரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்திலிருந்து மட்டுமே விலக்களிக்கப்படும். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு கட்டணங்களை செலுத்த கடைசி தேதி: 14.11.2014
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2014
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2014 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை.
தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வு மாவட்ட, தாலுகா என 244 மையங்களில் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்வு குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
எழுத்துத் தேர்வு விவரம்: எழுத்துத் தேர்வு 200 வினாக்களுடன் 300 மதிப்பெண்களை கொண்டது. இதற்கான தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.
வினாத்தாள் அமைப்பு:
1. பொது அறிவு பிரிவிலிருந்து 75 வினாக்களும்,
2. திறனறிவு பிரிவிலிருந்து 25 வினாக்களும்,
3. பொது தமிழ்/ பொது ஆங்கிலத்திலிருந்து 100 வினாக்களும் அமைந்திருக்கும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/18_2014_not_eng_grp4_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.