மத்திய பவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியாளர், உதவியாளர், டெக்னீசியன் பணி

cpri

மத்திய மின்துறை அமைச்சகத்தின்கீழ் தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் மத்திய பவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 37 பொறியாளர் உதவியாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.CPRI/01/2016

பணி: Engineering Officer (Gr-3)  – 02
தகுதி: Electrical துறையில் எம்.எஸ்சி அல்லது பி.இ முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineering Officer (Gr-2)  – 02
தகுதி: Electrica பிரிவில் எம்.டெக் அல்லது M.Sc + P.hD முடித்திருக்க வேண்டும்.

பணி: Engineering Officer (Gr-1)  – 04
தகுதி: Electrical துறையில் B.E அல்லது M.Sc முடித்திருக்க வேண்டும்.

பணி: Engineering Asst (Gr-2) – 01
தகுதி: Electrical  பிரிவில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineering Asst (Gr-1) – 03
தகுதி: Electrical பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician (Gr-2) – 04
தகுதி: எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி +  டிப்ளமோ பார்மசி முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician (Gr-1)  – 01
காலியிடங்கள்: எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Asst Librarian – 01
தகுதி: நூலக அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant (Gr-2) – 03
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கில தட்டச்சு பணியில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant (Gr-1)  – 16
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், ஹிந்தியில் 25 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: பெங்களூர்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cpri.in/careers.html?task=viewid&id=103  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

Leave a Reply