சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர்

images (4)

நாக்பூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (Environmental Engineering Research Institute) ஆராய்ச்சி பணிக்கு தகுதியானவர்கள் தேவை.

பணியிடங்கள் விவரம்:

1. Scientist/Senior Scientist (Environmental Engineering):

5 இடங்கள் (பொது-4, எஸ்சி-1).

வயது:

சயின்டிஸ்ட் பணிக்கு 32 வய திற்குள்ளும், சீனியர் சயின்டிஸ்ட் பணிக்கு 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி:

Environmenal Engineering/Environmental System Engineering and Modelling பாடத்தில் எம்.இ/எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சீனியர் சயின்டிஸ்ட் பணிக்கு மேற்குறிப்பிடப்பட்ட கல்வித்தகுதியுடன் 3 வருட பணிஅனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கவும்.

2. Scientist/Senior Scientist (Environemtal Engineering):

3 இடங்கள் (எஸ்டி-1, ஒபிசி-2).

வயது:

சயின்டிஸ்ட் பணிக்கு 32க்குள்ளும், சீனியர் சயின்டிஸ்ட் பணிக்கு 37க்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி:

Environmental Engineering பாடத்தில் எம்.இ/எம்.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். சீனியர் சயின்டிஸ்ட் பணிக்கு மேற்குறிப்பிடப்பட்ட கல்வித்தகுதியுடன் 3 வருட பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100/- இதை The Director, CSIR-NEERI, Nagpur என்ற முகவரியில் நாக்பூரிலுள்ள ஸ்டேட் வங்கியின் கிளை (branch Code: 04224)ல் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண்டும். எஸ்சி.,எஸ்டி மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.neeri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.10.2015.

Leave a Reply