தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள 417 துணை வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 417
பணி: Assistant Agricultural Officer (துணை வேளாண் அலுவலர்)
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் வேளாண் துறையில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.தமிழ்மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு: இரண்டு தாள் கொண்டது.
முதல் தாளில்: வேளாண்மை பட்டயம் தரத்தில் 200 வினாக்கள் கொண்டது. 300 மதிப்பெண்கள் கொண்டது.
இரண்டாம் தாளில்: General Studies (HSC தரத்தில்) 100 வினாக்கள், 200 வினாக்கள் கொண்டது.
சம்பளம்: மாதம் ரூ.5200 – 20,200 + தர ஊதியம் ரூ. 2800.
தேர்வு கட்டணம்:
1. இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு ரூ.150.
2. இட ஓதுக்கீடு பிரிவினருக்கு ரூ.50
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்லவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2015
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2015
தாள் – I: காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.
தாள் – II: மாலை 2:30 மணி முதல் – 04:30 மணி வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/1_2015_not_eng_asst_agrl_Officer.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.