மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 394 Probationary Engineer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Probationary Engineer (PE)
காலியிடங்கள்: 394
Electronics – 200
Mechanical – 120
Computer Science – 57
Civil – 10
Electrical – 07
சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500
வயதுவரம்பு: 01.05.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம்
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.06.2015
விண்ணப்பக் கட்டண்: ரூ.500. இதனை எஸ்பிஐ வங்கியின் கிளையில் ரொக்கமாக செலுத்த வேண்டும். இதற்கான செல்லான் படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் மற்றும் செல்லான் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Post Box No.3076, Lodi Road, New Delhi – 110003.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.05.2015
அஞ்சலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.