ரயில்வே அமைச்சகம் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான IRCON நிறுவனம் இந்திய ரயில்வேயில் உள்கட்டமைப்பு திட்டங்கள், நெடுஞ்சாலைகள், கட்டிடங்கள் மற்றும் மின்சார துறையில் முதன்மை வகித்து வருகிறது. இந்நிறுவனம் 11 பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Works Engineers (Electrical)
காலியிடங்கள்: 10
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24500.
வயதுவரம்பு: 01.03.1982ன்படி கண்க்கிடப்படும்.
பணி: Consultant (Electrical)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது முடித்து 10 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்து 20 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000.
வயதுவரம்பு: 01.04.1957ன்படி கண்க்கிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. ரூ.300. SC, ST, பொதுப்பணித்துறை, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி தேவையான சுயசான்று செய்யப்பட்ட சான்றிதழ் நகல்கள் மற்றும் டி.டி இணைத்து Joint
General Manager/ HRM, Ircon International Limited, C-4, District Centre, Saket, NewDelhi -110 017 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2015
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ircon.org/images/file/Recruitment_vacancy/2015/Advt%20C03%20%20-2015%20%20detailed%20combined.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.