மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் பைபர் ஆப்டிக்ஸ் நெட்வொர்க் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம் பாரத் பிராட்பேண்டு (Bharat Broadband Network Limited). இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள காலியாக உள்ள எக்ஸிக்யூடிவ் டிரெய்னி இடங்களை கேட் 2015 தேர்வு அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு: 21 – 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிஸ் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
குறிப்பு: கேட் 2015 தேர்வில் இ.சி., சி.எஸ்., ஐ.டி., இ.இ., தாள்களில் தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்களை அறிய http://www.bbnl.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.