இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்(LIC), காலியாக உள்ள 200 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளது.
பணி விபரங்கள்
* துணை நிர்வாக அதிகாரி(ஜெனரலிஸ்ட்) – 40 பணியிடங்கள் (ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு)
* துணை நிர்வாக அதிகாரி (ஜெனரலிஸ்ட்) – 60 பணியிடங்கள்(வடகிழக்கு பிராந்தியம்)
* துணை நிர்வாக அதிகாரி (சார்டர்ட் அக்கவுன்டன்ட்) – 100 பணியிடங்கள் (அகில இந்தியா முழுவதும்)
இடஒதுக்கீட்டின்படி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. வயது வரம்பை பொறுத்தமட்டில், ஒவ்வொரு பிரிவுக்கும் வெவ்வேறு சலுகைகள் உள்ளன.
ஆன்லைன் முறையிலான நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணியாளர் தேர்வு நடைபெறும். மேலும், மருத்துவப் பரிசோதனைக்கும் உட்பட வேண்டும்.
இப்பணியில் சேர்வதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி நாள் – ஜனவரி 22.
அனைத்து விரிவான தகவல்களுக்கும் http://www.licindia.in/pages/Employment_Notification_r.pdf