தேசிய கூட்டுறவு நிறுவனத்தில் அதிகாரி பணி
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய பொது கூட்டுறவு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 15 துணை, உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை இயக்குநர் – 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
தகுதி: மனை அறிவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து இயல், குழந்தைகள் மேம்பாடு, உளவியல், கல்வி, சமூகவியல், மனிதஇன இயல், மேலாண்மை, பொதுநிர்வாகம், புள்ளியியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: உதவி இயக்குநர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
தகுதி: மனை அறிவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து இயல், குழந்தைகள் மேம்பாடு, உளவியல், கல்வி, சமூகவியல், மனிதஇன இயல், மேலாண்மை, பொதுநிர்வாகம், புள்ளியியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: வெளியீட்டு அதிகாரி
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
தகுதி: +2 தேர்ச்சியுடன் பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் பி.இ., அல்லது டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: உதவி நிர்வாக அதிகாரி
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டத்துடன் அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: ஆராய்ச்சி உதவியாளர்:
காலியிடங்கள்: 05
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டத்துடன் புலனாய்வு மற்றும் புள்ளியியல் துறையில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 39,100 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று அரசு அல்லது அரசு சார்பு நிறுவனங்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்.க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: இணை இயக்குநர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.7,600.
தகுதி: மத்திய மாநில அரசு அலுவலகங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இணை இயக்குநர் அந்தஸ்தில் PB-3 + தர ஊதியம் ரூ.6,600 இல் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
பணி: திட்ட அலுவலர்
காலியிடங்கள்: 01
தகுதி: சமூகவியல் அல்லது சமூக அறிவியல் துறையில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் ரூ.5,400 தர ஊதியத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது: 56க்குள்.
பணி: பிரிவு அலுவலர்
காலியிடங்கள்: 01
தகுதி: வணிகவியல் பாடத்தில் பட்டப்படிப்புடன் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் PB-2 + ரூ.4,600 தர ஊதியத்தில் நிதித்துறை அதிகாரியாக குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.250. இதனை National Institute of Public Co-operation and Child development என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடு்தது செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: மாதிரி விண்ணப்பத்தை www.nipccd.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு செய்து, முழுமையான விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The National Institute of Public Cooperation and Child Development,
5, Siri Institutional Area,
Hauz Khas,
NEWDELHI-110 016.
முழுமையான விவரங்கள் அறிய www.nipccd.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.