தைலம் தயாரிக்கும் முறை: புளிய இலை ஆறு கையளவு, சாதாரண கல் உப்பு ஒரு கையளவு எடுத்துக்கொண்டு இரண்டையும் சேர்த்து (தண்ணீர் தெளிக்காமல்) இடித்து தூளாக்கி (அல்லது மிக்ஸியில் தூளாக்கி) அரை லிட்டர் நல்லெண்ணையில் ஊறப் போடவும். சுமார் ஆறு நாட்கள் ஊறிய பிறகு அபூர்வ தைலம் ரெடியாகி விடும். தைலத்தை காய்ச்சவோ சூடாக்கவோ அவசியமில்லை.
மூலிகை குளியலுக்குத் தேவைப்படும் மூலிகைகள்: புளிய இலை 2. மஞ்சனத்தி இலை 3. தழுதழை 4. யூகலிப்டஸ் இலை 5. நொச்சி இலை 6. வேப்ப இலை 7. ஆடா தொடா இலை 8. தும்பை இலை 9. குப்பைமேனி இலை இவற்றில் எவை கிடைக்கிறதோ அவற்றை பயன்படுத்தினால் போதுமானது.
இந்த இலைகளை எல்லாம் ஒரு பக்கெட்டில் போட்டு நல்ல வென்னீரை விட்டு வைத்தால் பத்து நிமிடத்தில் சாறு இறங்கி விடும். காப்பி டிகாஷன் கலரில் தண்ணீர் இருக்கும். அந்த கலவையை வடிகட்டி அந்த நீரில் குளிக்க வேண்டும். வடிகட்டின மூலிகை இலைகளை ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தலாம்.
இப்படி பதினைந்து நாட்கள் குளித்தால் எல்லா வலிகளும் உங்களை விட்டுப் பறந்து விடும். நல்ல தூக்கம் வரும். தலைவலி, சைனஸ், மூச்சுத் திணறல், சளிப் பிரச்சினை போன்றவை அனைத்தும் குணமாகும்.