மத்திய அரசில் இணைச் செயலாளர், பேராசிரியர் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு

download (4)

மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள இணைச் செயலாளர் மற்றும் சட்டமன்ற ஆலோசகர் (இந்தி), பேராசிரியர் (சிவில் பொறியியல்) மற்றும் இணை பேராசிரியர் (சிவில், மெக்கானிக்கல்) மூத்த அறிவியல் அதிகாரி கிரேடு-II போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

விளம்பரம் எண்.17/2015

மொத்த காலியிடங்கள்: 14

1. Senior Scientific Officer (Mechanical)- 09

2. Joint Secretary & Legislative Counsel (Hindi Branch)- 01

3. Professor (Civil Engineering)- 01

4. Associate Professor (IT)- 01

5. Associate Professor (Mechanical)- 01

6. Associate Professor (Civil)- 01

வயது வரம்பு: மூத்த அறிவியல் அதிகாரி பணிக்கு 35க்குள்ளும், மற்ற அனைத்து பணிகளுக்கும் 50க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல், ஐடி, சட்டத்துறையில் எல்எல்எம் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். SC,ST,PH மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு பணித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2015.

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.12.2015.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply