99 வயது பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங் மரணம்.

7

 

இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங், புதுடில்லியில் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 99.

சிலகாலமாக உடல்நலக்குறைவால் பொதுவாழ்க்கையில் இருந்து விலகியிருந்த குஷ்வந்த் சிங் அவர்கள் டில்லியில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை காலமானதாக அவரது மகன் ராகுல் சிங் கூறியுள்ளார்.

குஷ்வந்த் சிங்கின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குஷ்வந்த் சிங்கின் மகன் ராகுல் சிங்குக்கு பிரணாப் முகர்ஜி இரங்கல் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் “குஷ்வந்த் சிங், அச்ச உணர்வு சிறிதும் இல்லாத அறிவாளி. சிறந்த புத்திக் கூர்மை கொண்டவர். தனிப்பட்ட ஆற்றல் மிக்கவர். சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரது மறைவுச் செய்தியை கேள்விப்பட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், அவருடையா ஆன்மா சாந்தியடைய தான் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 1915ஆம் ஆண்டு பிறந்தார் குஷ்வந்த் சிங். 1947ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் பணி செய்தார்.

1948ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரை கனடா நாட்டின் டொரண்டோ நகரில் இந்திய அரசின் தகவல்தொடர்புத் துறை அதிகாரியாக பணிபுரிந்த அனுபவமும் இவருக்கு உண்டு.

முதலில் “யோஜனா’ என்னும் பத்திரிகையை ஆரம்பித்து, அதன் ஆசிரியராக இருந்தார். அதனையடுத்து “இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’ வார இதழ், நேஷனல் ஹெரால்ட், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

முதலில் மாநிலங்களவை உறுப்பினராகவும், பின்னர் 1980 முதல் 1986 வரை மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். அவரது மனைவி கன்வல் மாலிக் கடந்த 2001ஆம் ஆண்டு இறந்தார். குஷ்வந்த் சிங்குக்கு ராகுல் சிங் என்ற மகனும், மாலா என்ற மகளும் உள்ளனர்

Leave a Reply