சினிமாவுக்கு ஏதேனும் செய்துவிட்டு அரசியலுக்கு போங்க: ரஜினி-கமலுக்கு தயாரிப்பாளர் கோரிக்கை
தமிழ் திரையுலகம் க்யூப் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருப்பதால் ரஜினி, கமல் ஏதாவது செய்து திரையுலகை காப்பாற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ‘அரசியலுக்கு உயர்த்திக் கொண்ட உச்ச நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். ஏற்றி விட்ட ஏணி இப்போது சீக்கு வந்த யானையாக தவிக்கிறது. நீங்கள் இருவரும் ஆண்டு அனுபவித்து ஆஸ்தி சேர்க்க அனைத்துமாக இருந்த திரைப்படத் துறையின் இன்றைய இன்னல்களை உங்கள் சேவையால், பார்வையால் காப்பாற்ற ஏதேனும் செய்து விட்டு உங்கள் அரசியல் பயணத்தை துவங்குங்கள்.
நாங்களும் உடன் இருப்போம். யோசித்து உடனே வாருங்கள். கவலையோடு அல்லாடிக்கொண்டிருக்கிறது கலைக்குடும்பம்… கோடம்பாக்க சேவையே இப்போதைய தேவை.
இவ்வாறு ஜே.எஸ்.கே. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.