ஜனாதிபதியை சந்திக்க நீதிபதி கர்ணன் திட்டமா? திடுக்கிடும் திருப்பம்

ஜனாதிபதியை சந்திக்க நீதிபதி கர்ணன் திட்டமா? திடுக்கிடும் திருப்பம்

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை உடனடியாக கைது செய்து ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னையில் இருக்கும் நீதிபதி கர்ணனை கைது செய்ய நேற்று கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர்.

ஆனால் சென்னையில் நீதிபதி கர்ணன் இல்லை என்றும், அவர் ஆந்திராவில் உள்ள காளகஸ்திக்கு சென்றுவிட்டதாகவும் வந்த தகவலை அடுத்து கொல்கத்தா போலீசார் ஆந்திரா சென்றனர். ஆனால் அங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இன்று தமிழக, ஆந்திரா மற்றும் கொல்கத்தா போலீசார் இணைந்து நீதிபதி கர்ணனை தேடும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தனர். இந்த நிலையில் நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் சற்று முன்னர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘ நீதிமன்ற தண்டனை உத்தரவு குறித்து, நீதிபதி கர்ணன் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளார். நீதிபதி கர்ணன் சென்னையில்தான் தங்கி உள்ளார். அவர் வேறு எங்கும் தப்பித்து செல்லவில்லை. எனவே அவருக்கு விதிக்கப்பட்டுள்ள ஆறு மாத சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply