டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றங்கள் தடை.
அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி அறிவிப்புகளை டொனால்ட் டிரம்ப் அறிவித்து வரும் நிலையில் அவர் அறிவித்த ஒரு முக்கிய அறிவிப்பான ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் விசா தடை விதித்த அறிவிப்பு. இந்த அறிவிப்புக்கு அமெரிக்க நீதிமன்றங்கள் அதிரடியாக தடை விதித்துள்ளன.
கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் டிரம்ப் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றங்கள் டிரம்ப் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தன. மேலும் இந்த உத்தரவுக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்றங்களின் இந்த தடைக்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளார். அரசின் அதிகார ஆணையின் மீது நீதிபதிகள் அதிகாரம் செலுத்துவது கேலிக்குரியது என்று டிரம்ப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.