சதாம் உசேனுக்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதிக்கு மரணதண்டனை. பழிக்கு பழிவாங்கிய தீவிரவாதிகள்

sadamஇராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கை நாளுக்கு நாள் ஓங்கி வருகிறது. ஏற்கனவே நான்கு முக்கிய நகரங்களையும், ஒருசில முக்கிய எண்ணெய் கிணறுகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பாக்தாத் நகரை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சதாம் உசேனுக்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தீவிரவாதிகளின் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்த தகவலை ஜோர்டான் நாட்டு எம்.பி. ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கு எதிராக கடந்த 2003ஆம் ஆண்டு போர் செய்த சன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்த சதாம் உசேன், போரில் தோல்வியுற்று பின்னர் பதுங்கு குழியில் பதுங்கியிருந்தார். 2006ஆம் ஆண்டு அவர் ஷியா பிரிவு முஸ்லீம் படைகளிடம் பிடிபட்டு பின்னர் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியவர் குர்து இனத்தை சேர்ந்த ரவூப் அப்துல் ரஹ்மான் என்ற நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சன்னி பிரிவு முஸ்லீம் கை ஓங்கியுள்ளதால் தங்கள் தலைவர் சதாம் உசேனுக்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதியை கைது செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர் அவருக்கு ரகசிய இடத்தில் மரண தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. ஒரு நீதிபதிக்கே மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதால் ஈராக்கில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply