சஞ்சய்தத்துக்கு மட்டும்தான் பரோல் விடுதலையா? நீதிபதி சரமாரி கேள்வி

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று புனே சிறையில் இருக்கும் சஞ்சய் தத்த்துக்கு இதுவரை மூன்று முறை பரோல் கொடுத்த காவல்துறையினர் அதே வழக்கில் தொடர்புடைய ஒருவரின் மகள் இறந்ததால் பரோல் கேட்டார். ஆனால் அவருக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்த வழக்கு ஒன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, நீதிபதி காவல்துறையினர்களை சரமாரியாக கேள்வி எழுப்பினார். நடிகர்களுக்கு மட்டும்தான் காவல்துறை மனிதாபமான முறையில் பரோல் கொடுக்குமா? சாதாரண குடிமகனுக்கு எவ்வித சலுகையும் கிடையாது என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

சஞ்சய் கைதான அதே வழக்கில் நாக்பூர் சிறையில் உள்ள மோகுத் யாகுப் என்பவரின் மகள் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். மகளின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அவரது மனைவி, தனது கணவரை பரோலில் விடுதலை செய்யும்படி மனு செய்தார். ஆனால் அந்த மணுவை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், சிறைத்துறையின் அலட்சியப்போக்கை எதிர்த்து நாக்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மோகுத் யாகுப் மனைவியின் மனுவை விசாரித்த நீதிபதிகள், உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? என்று காவல்துறையினரைப் பார்த்து கேள்வி எழுப்பினர். மேலும், நடிகர்களிடம் மட்டும்தான் நீங்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வீர்களா? அப்படி என்றால், நடிகர்களுக்கு மட்டும்தான் மனிதாபிமான முறையில் பரோல் வழங்கப்படுமா? என்று சரமாரியாக கேள்வி கேட்டனர்.

Leave a Reply