மற்ற பணிகளை விட நீதிபதி பணிக்கு என ஒரு தனி மரியாதை உண்டு. ஆனால் நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகளே அலுவலக நேரத்தில் கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்ததாக திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதி டிமோத்தி பவுலெஸ், குடியுரிமைத் துறை நீதிபதி வாரென் கிரான்ட், மாவட்ட துணை நீதிபதி மற்றும் பதிவாளர் பேட்டர் புல்லக் மற்றும் ஆண்ட்ரு மா ஆகியோர்கள் அலுவலக நேரத்தில் நீதிபதி அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்கள்
இதுகுறித்த வழக்கு ஒன்று இங்கிலாந்து நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானடு. அந்த தீர்ப்பில், ”நமது நாட்டு நீதித்துறை சட்டங்களின்படி, இவர்களின் செயல்பாடு மன்னிக்கத்தக்கதல்ல. எனவே, டிமோத்தி பவுலெஸ், வாரென் கிராண்ட், பேட்டர் புல்லக் ஆகியோரை பணி நீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை. எனவே, அவர்கள் பணி பறிக்கப்படுகிறது” என சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீர்ப்பு
இந்த புகாரில் சிக்கிய ஆண்ட்ரு மா என்பவர், ஏற்கனவே அவராகவே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.