ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி: கொல்கத்தா சிறையில் பரபரப்பு
உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதிப்பு செய்த வழக்கு ஒன்றில் ஆறு மாத சிறைதண்டனை பெற்ற நீதிபதி கர்ணன் நேற்று முன் தினம் கோவையில் கொல்கத்தா போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் இரவு சென்னை விமானநிலையத்தில் தங்க வைக்கப்பட்டு அதன் பின் அவரை கொல்கத்தா அழைத்துச் சென்று, அங்குள்ள பிரெசிடென்சி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருந்த கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை சிறை காவலர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கர்ணனின் உடல்நிலை குறித்த தகவல்களை கொல்கத்தா போலீசாரும் சிறை அதிகாரிகளும் வெளியிடாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.